2024-06-13
ஜூன் 11ஆம் தேதியன்று வெளியான அறிக்கையின்படி, யூனிலீவர் ஸ்ரீலங்கா தனது ஹொரண தொழிற்சாலையில் 1.3 மில்லியன் யூரோக்களின் மொத்த முதலீட்டில் 2.33 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது.
இந்த முதலீடு தனது ஹொரண தொழிற்சாலையின் ஆற்றல் தேவையை 30% -35% பூர்த்தி செய்யும் என்றும், வருடாந்தம் 2090 மெட்ரிக் தொன் கார்பன் உமிழ்வை குறைப்பதாகவும், 48000 மரங்களை நடுவதற்கு சமமானதாகவும் யுனிலீவர் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான கார்பன் நடுநிலையை அடையும் இலக்குடன், இந்த ஆண்டு அதன் மொத்த சூரிய மின் உற்பத்தியை 4 மெகாவாட்டாக அதிகரிக்க நிறுவனம் எதிர்பார்க்கிறது.
யுனிலீவர் ஸ்ரீலங்கா என்பது உணவு, பானங்கள், துப்புரவு முகவர்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் உட்பட 30 பிராண்டுகளுடன் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களின் உற்பத்தியாளர் மற்றும் விநியோகஸ்தராகும்.